சினிமா செய்திகள்
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்!

அஜித் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அஜித் நடித்த தீனா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முருகதாஸ். அதன்பின்னர் விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி உள்பட பல வெற்றி படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு அனிமேஷன் படத்தை இயக்கி வருவதாகவும் இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் 1947. பொன்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to release the First look of #1947August16 produced by director @Armurugadoss sir in association with @purplebullent All the best to the team😊👍@NsPonkumar @Gautham_Karthik @RevathySharma @vijaytvpugazhO @iomprakashbhatt @adityajeee @khanwacky @RSeanRoland@selvakumarskdop pic.twitter.com/T3rLB0Yuf1
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 25, 2022