சினிமா செய்திகள்
கே.ஜி.எஃப். 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

யாஷ் நடித்த கே.ஜி.எஃப். 2 திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப். 2 திரைப்படம் கடந்த மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி 1300 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்திய திரையுலகில் இந்தப் படம் மிகப் பெரிய சாதனை செய்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
கே.ஜி.எஃப். 2 படத்தில் சிகரெட் மற்றும் மது அருந்தும் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் இந்த காட்சிகள் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்துவது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது இந்த படம் ஏற்கனவே வெளியாகி பெரும்பாலான ரசிகர்களை சென்று விட்டதால் இனிமேல் தடைவிதித்து எந்த பயனும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.