சினிமா செய்திகள்
புரடக்ஷன் நம்பர் 2 பூஜை போட்ட சிவகார்த்திகேயன்!
Published
4 years agoon
By
seithichurul
கனா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை சென்னையில் இன்று போடப்பட்டது.
பரிவட்டம் கட்டி புதுப் படத்துக்கு பூஜை போடும் ஸ்டைலை பின்பற்றி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள சிவகார்த்திகேயன் கனா படத்தை தொடர்ந்து, யூடியூப் சேனலான பிளாக் ஷிப் குழுவுடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார்.
ஸ்மைல் சேட்டை எனும் பெயரில் யூடியூப் ரசிகர்களை கவர்ந்து, பின்னர் பிளாக் ஷிப் என தங்களுக்கான தனி சேனலை நடத்தி வருகின்றனர். விக்னேஷ்காந்த் தலைமையில் நடைபெற்று இந்த குழுவின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் தான் இந்த புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சேட்டையன் கார்த்திக் என பலரும் அறிந்த இவரது படைப்பில் உருவாகப்போகும் புதிய படத்தில் நாயகனாக சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் கடைசி சரவணனாக நடித்த வி.ஜே. ரியோ தான் நடிக்கிறார். நாயகியாக கன்ச்வால் ஷிரின் என்பவர் நடிக்கிறார். மீசையை முறுக்கு படத்தை தொடர்ந்து விக்னேஷ்காந்த் இந்த படத்திலும் கமீட் ஆகியுள்ளார். மேலும், அந்த பிளாக்ஷிப் பட்டாளமே படத்தில் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கான பூஜை சென்னையில் இன்று போடப்பட்டது. சிவகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டனர்.
You may like
அஜித்துடன் மோத முடிவு செய்துவிட்ட சிவகார்த்திகேயன்: ஒரே நாளில் ரிலீஸ்!
பிரின்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற டைட்டில்: ‘எஸ்கே 20’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ!
இந்திய சினிமாவின் ’டான்’ உடன் ஒரு சந்திப்பு: சிவகார்த்திகேயன் டுவிட்
கமல் தயாரிப்பில் விஜய், சூர்யா நடிப்பது உண்மையா?
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் பாதைக்கு வாங்க: அஜித், விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்