சினிமா செய்திகள்
இறந்த ரசிகரின் குடும்பத்தை தத்தெடுத்த சூர்யா!

நடிகர் சூர்யாவின் ரசிகர் ஒருவர் சமிபத்தில் இறந்துவிட்டார் அதற்காக அவர் குடும்பத்தை தான் பார்த்துக்கொள்வதாகவும், அவர் மகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது வயது 35, இவர் டீக்கடையில் தொழிலாளராக பணிப்புரிந்து வந்தார். மேலும் இவர் சூர்யா ரசிகர் மன்றத் தலைவர் ஆவார்.
சில நாட்கள் முன்பு நுரையீரல் பாதிப்பு காரணமாக மணிகண்டன் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த சூர்யா, இறந்துப்போன என் ரசிகன் ஒரு கூலித் தொழிலாளி அதனால் அவர் குடும்ப செலவுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவரது மகளின் படிப்பு செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனால் மணிகண்டன் குடும்பத்திற்கு ஆறுதல் கிடைத்துள்ளது.
யாருக்கும் தெரியாமல் இரவு பத்து மணிக்கு மேல் காரில் சென்று மணிகண்டன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளர், சூர்யா.


















