சினிமா செய்திகள்
இந்திய சினிமாவின் ’டான்’ உடன் ஒரு சந்திப்பு: சிவகார்த்திகேயன் டுவிட்

நடிகர் சிவகார்த்திகேயன் ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்திய சினிமாவின் ’டான்’ உடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என சிவகார்த்திகேயன் சற்று முன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது என்று கூறப்படுகின்றது. இதனை அடுத்து ’டான்’ படக்குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
டாக்டர், டான் என இரண்டு அடுத்தடுத்த 100 கோடி ரூபாய் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு திரையுலகில் மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிவகார்த்திகேயன் சந்தித்து வாழ்த்து பெற்ற உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்த சிவகார்த்திகேயன், ‘இந்திய சினிமாவின் ’டான்’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தேன். அந்த 60 நிமிட சந்திப்பை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. எனக்காக நேரம் ஒதுக்கிய தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினியை சந்தித்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.