சினிமா செய்திகள்
நடிப்பிலும், ஆக்சனிலும் அசத்திய அண்ணாச்சி: ‘தி லெஜண்ட்’ டிரைலர்

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவரணன் நடிப்பு மற்றும் நடனம் குறித்து பலர் கேலி செய்தாலும் இந்த டிரைலரை பார்த்தவர்கள் அவருடைய நடிப்பு மற்றும் ஆக்சன் காட்சிகளை பார்த்து வாயடைத்துப் போய் இருப்பார்கள் என்பது உறுதி.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் சரி, சென்டிமென்ட் காட்சிகளிலும் சரி, ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி அவர் உண்மையிலேயே சரவணன் அசத்தியுள்ளார். மேலும் படம் பிரம்மாண்டமாகவும் கலர்புல்லாக எடுக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய பிளஸ்.
விஞ்ஞானியாக நடித்திருக்கும் சரவணன் பொதுமக்களுக்கு நன்மை செய்யும் வகையில் சேவை செய்ய முற்படும்போது வில்லன்களால் ஏற்படும் சிக்கலை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
ஜே.டி.ஜெர்ரியின் அருமையான திரைக்கதை, ஹாரிஸ் ஜெயராஜின் இசை ஆகியவை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் வாய்ந்ததாக உள்ளது. மொத்தத்தில் ஒரு ஜனரஞ்சகமான குடும்பத்துடன் பார்க்கும் படமாக இந்த படம் அமைந்துள்ளது என்பது டிரைலரில் இருந்து தெரியவருகிறது.