சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்பட ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்பு திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் திரைப்படம் ஹீரோ.
யுவன் ஷங்கர் ராஜா இசையில், கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் ஹீரோ திரைப்படத்தின் ஃபார்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

இரும்பு திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்த அர்ஜூன் ஹீரோவில் முக்கிய கதாபாத்திரத்திலும், கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஹீரோ ஃபர்ஸ் லுக்குல் பிரம்மாண்ட அப்பார்ட்மெண்ட்கள் முன்பு, சிவகார்த்திகேயன் சூப்பர் மேன் முகமூடி ஒன்றைக் கையில் வைத்துள்ளது போன்று வெளியாகியுள்ளது.
















