சினிமா செய்திகள்
’மாநாடு’ படத்தின் அட்டகாசமான டிரைலர்

சிம்பு நடித்த மாநாடு ’மாநாடு’ டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் எதிர்பார்த்ததைவிட அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் சுட்டுக் கொல்லப்படுவது போல் சிம்பு காணும் கனவு, அந்த கனவு நனவாக கூடாது என்பதற்காக அவர் எடுக்கும் முயற்சி, எஸ்ஜே சூர்யா வின் வில்லத்தனத்தை சிம்பு சந்திக்கும் விதம், ஆகியவை சிறப்பாக படமாக்கப்பட்டு இருப்பதாக டிரைலரில் தெரியவருகிறது.
மேலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவருக்கும் இடையே ஒரு நடிப்பு போட்டியே இந்த படத்தில் நடந்து உள்ளது என்று கூறலாம். அந்த அளவுக்கு இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
அதேபோல் ஒளிப்பதிவாளர் ரிச்ச்ரட் நாதன் இந்த படத்தில் ரிஸ்க் எடுத்து பணிபுரிந்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை வியக்க வைக்கிறது. மொத்தத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமன்றி அனைத்து ரசிகர்களுக்கும் ஆனால் விருந்து என்றே கூறலாம்.