சினிமா செய்திகள்
ஹன்சிகாவின் மஹா திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்பு!

ஹன்சிகா மஹா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால் இந்த படத்தில் சிம்பு கேஸ்ட் ரோலில் நடித்தால் 30 நிமிட காட்சிகளில் வருவார் என்று படக் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வந்தா ராஜா தான் வருவேன் திரைப்படத்திற்குப் பிறகு ஹன்சிகாவின் மஹா திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்டுள்ளார்.
இந்த படப்பிடிப்பு முடிந்த உடன் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பிப்ரவரி மாதமே மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் உடல் எடையைக் குறைக்கச் சிம்பு லண்டன் மற்றும் சீனா சென்றதால் தற்போது வரை மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் உள்ளது.









