சினிமா செய்திகள்
இதுக்கு அந்த நந்தினி சீரியலே பரவாயில்லை.. நீயா 2 விமர்சனம்!

ஜெய், ராய் லட்சும், வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா நடிப்பில் வெளியாகியுள்ள நீயா 2 படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
1979ம் ஆண்டு வெளியான நீயா படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. உடலை எப்படி வேண்டுமானாலும், ஒரு பாம்பு தனது இறந்து போன காதலை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அடைய செய்யும் போராட்டமே நீயா 2 படத்தின் கதைக்களம்.
ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரிப்பில் இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள நீயா 2 படத்தில் மூன்று நாயகிகள் கவர்ச்சி ததும்ப ததும்ப நடித்திருப்பதை தவிற வேறு எந்த பிளஸ்சும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நந்தினி சீரியலில் வருவது போல மொக்கை கிராபிக்ஸில் பாம்பை காட்டும் போதெல்லாம் பயம் எப்படி வரும். பயம் வருவதற்கு பதிலாக சிரிப்புத் தான் வருகிறது.
கேத்தரின் தெரசா மற்றும் வரலட்சுமி சரத்குமாருக்கு இந்த படத்தில் கம்மியான சீன்கள் தான். அதிகமான சீன்களில் ராய் லட்சுமி தான் ஆதிக்கம் செலுத்துகிறார். கதையின் நாயகியும் ராய் லட்சுமி தான்.
ஜெய் வழக்கம் போல தனது அசால்ட்டான நடிப்பை நடித்துச் சென்றாலும், இதுபோன்ற படங்களுக்கு நல்ல கிராபிக்ஸ் இல்லையென்றாலே படம் படுத்து விடுவது போல, படம் ஆரம்பத்தில் பாம்பை காட்டும் போது படுத்தது தான்.. பின்னர், இறுதி வரை படம் எடுக்கவே இல்லை.
சினிமா ரேட்டிங்: 1.75/5.



















