தமிழ்நாடு
பாஜகவினர் கேட்ட ஒரே ஒரு கேள்வி: டுவிட்டரை விட்டே ஓடிய நடிகர் சித்தார்த்!

பாஜகவினர் டுவிட்டரில் கேட்ட ஒரே ஒரு கேள்வியை அடுத்து சித்தார்த் டுவிட்டரை விட்டே ஓடி விட்டதாக பாஜகவினர் கேலியும் கிண்டலும் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நடிகர் சித்தார்த் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து காரசாரமாக டுவிட்டுக்களை பதிவு செய்வார் என்பதும் அதேபோல் மத்திய அரசுக்கு எதிர்த்தும் மோடியை எதிர்த்தும், மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும் காரசாரமாக டுவிட்டுக்களை பதிவு செய்து வந்தார். குறிப்பாக உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பொய் சொன்னால் முதல்வர் என்றும் பாராமல் கன்னத்தில் அறைவேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதியை திமுக கொடுத்த நிலையில் நேற்று நீட் தேர்வு நடந்துள்ளது. பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என்று சொன்ன சித்தார்த் எங்கே சென்றார்? என பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சித்தார்த்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிவு காரசாரமாக பதில் அளித்து, டுவிட்டரை டாய்லெட் ஆக்கி வச்சிருக்கீங்க என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இதனை அடுத்து சித்தார்த்துக்கு கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று திடீரென அவரது டுவிட்டர் பக்கத்தில் ’கேன்சல்டு பை’ என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக வெளியேறி விட்டார் என்று கருதப்படுகிறது. இதனை அடுத்து பாஜகவினர் தற்போது கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஒரே ஒரு டுவிட்டுக்கு பதிலளிக்க முடியாமல் சித்தார்த் டுவிட்டரை விட்டே சென்றுவிட்டார். சின்ன பிள்ளையை போட்டு இந்த அடி அடிச்சு போட்டிருக்கிங்க’ பதிவாகி வருகிறது.
ஒரு நடிகர் சமூக வலைதளத்தில் பதிவு செய்யும்போது எந்த கட்சியும் சாராமல் எந்த ஆட்சியில் தவறு நடந்தாலும் கேள்வி கேட்க வேண்டும் என்பதுதான் இயல்பு.ஆனால் சித்தார்த் அதிமுக ஆட்சியில் மட்டும் பல்வேறு கேள்வி கேட்டவர் திமுக ஆட்சியில் வாயைப் பொத்திக் கொண்டு இருக்கிறார் என்றுதான் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
https://twitter.com/srirvij1/status/1437416150048985097




















