டிவி
மறுபடியும் முதல்ல இருந்தா… மீண்டும் இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட ஷிவானி!

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்கள் பகிர்ந்ததன் மூலமே புகழ் பெற்றவர் ஷிவானி நாராயணன். தொடர்ந்து சில டிவி சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராகவும் அவர் நுழைந்தார்.
பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே சென்ற ஷிவானி, மிகவும் அமைதியாக யாருடனும் பழகாதவராகவே இருந்து வந்தார். வீட்டுக்குள் கொடுக்கப்படும் டாஸ்க் மற்றும் போட்டிகளிலும் அதிகமாக பங்கெடுத்துக் கொள்ளாமல் விலகியே இருந்தார். இருப்பினும் தன் ரசிகர்களின் ஆதரவால் வீட்டுக்குள் தொடர்ச்சியாக இருந்தார்.
ஆனால், கடைசி வாரத்தில் எவிக்ட் செய்யப்பட்டு வெளியே வந்தார் ஷிவானி. இப்படி வெளியே வந்தவர் மீண்டும் இன்ஸ்டாகிராமில் பழைபயபடி புகைப்படங்களைப் பதிவேற்ற ஆரம்பித்துள்ளார். ஷிவானி, எப்படியும் அடுத்ததாக விஜய் டிவி ஷோக்களில் பங்கேற்பாளராக ஒரு ரவுண்டு வருவார் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக விஜய் டிவி சீரியல்களில் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் தோன்றலாம்.
View this post on Instagram
பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவானிக்கும் பாலாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இந்த நட்பு வெளியே வந்த பின்னரும் தொடருமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.