Connect with us

டிவி

‘Gaby-க்கு இவ்ளோ அறிவா… அந்த சூட்கேஸ் எடுத்தது வேற லெவல்..!’ – உண்மையை உடைத்த நெருங்கிய தோழி

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த போட்டியாளர்களில் ஒருவர் கேபி என்னும் கேப்ரியல்லா. இறுதிச் சுற்று வரை முன்னேறிய கேபி, கடைசி நேரத்தில் கொடுத்த ‘சூட்கேஸ் ஆப்ஷனை’ பெற்றுக் கொண்டு வெளியேறினார். கேபியின் அந்த செயல் அவரின் ரசிகர்களின் மனங்களை நொறுக்கி இருந்தாலும், அவரின் நெருங்கிய தோழியான ஸ்ரீநிதி அப்படி நினைக்கவில்லை.

பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை எவிக்ட் ஆகாமல் இருந்தவர்கள் ஆரி, பாலா, ரியோ, ரம்யா பாண்டியன் மற்றும் சோம். இதில் சோம், 5வது இடத்தில் வந்தார். இவரை அடுத்து ரம்யா, மூன்றாவது ரன்னர்-அப்பாக வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவருக்குப் பின் ரியோ ராஜ், இரண்டாவது ரன்னர்-அப் ஆகவும், பாலா ரன்னர்-அப் ஆகவும் வந்தனர். கடைசி வரை நின்று டைட்டில் அடித்தது ஆரி.

இறுதிச் சுற்றுவரை முன்னேறிய கேபிக்கு, 5 லட்ச ரூபாய் பணம் வேண்டுமானால், கிராண்டு ஃபினாலேவில் பங்கேற்காமல் உடனடியாக வெளியேற வேண்டும் என்கிற ஆப்ஷன் கொடுக்கப்பட்டது. ஆரி, பாலா போன்ற டஃப் போட்டியாளர்கள் இருப்பதை உணர்ந்த கேபி, 5 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Nidhi (@sreenidhi_)

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கேபி, தன் நெருங்கிய தோழி ஸ்ரீநிதியைப் பார்க்கச் சென்றார். அப்போது இருவரும் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். அந்த வீடியோவைப் பகிர்ந்த ஸ்ரீநிதி, ‘கேபி, உள்ளே போகும் போது, கமல் சாரிடம், நேர்மையான கேம் விளையாடுவேன் என்றார். அதைத் தான் அவள் செய்தாள். உங்கள் அனைவருக்கும் அது நன்றாக தெரியும்.

சூட்கேஸ் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பு வரும் முன்னரே, அதை கேபி பயன்படுத்தி எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என்றுதான் நினைத்தோம். ஆனால், அவள் அதை செய்வாள் என்று நினைத்துப் பார்க்கவில்லை. சூட்கேஸை கேபி எடுத்துக் கொண்ட போது, எங்களுக்கெல்லாம் மெய் சிலிர்த்துவிட்டது. அவளுக்கு இவ்வளவு அறிவு இருக்கிறது என்பதை யோசிக்க வைத்து விட்டாள். உன்னை நினைத்துப் பெருமைப் படுகிறேன்’ என்று நெகிழ்ச்சிப் பொங்க பதிவிட்டுள்ளார்.

 

 

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள புதிய வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

நீட் தேர்வில் தோல்வியா? கவலை வேண்டாம்! உங்களுக்கான 10 சிறந்த மாற்று வழிகள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

தமிழக மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலிபணியிடங்கள் 2553!

செய்திகள்7 நாட்கள் ago

இன்று தங்கம் விலை குறைவு (05/06/2024)!

வணிகம்3 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி4 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்5 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?