இந்தியா
மனைவியை விவாகரத்து செய்தார் ஷிகர் தவான்: பரபரப்பான இன்ஸ்டாகிராம் பதிவு!

ஷிகர் தவானும் அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இவர்கள் இருவரிடையே 9 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கடந்த 2012ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரை சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆயிஷாவின் 2 மகன்களை தத்து ஷிகர் தவான் எடுத்துக்கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தைம் பிறந்தது.
இந்திய அணி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது தளத்தில் ஷிகர் தவானும் ஆயிஷா முகர்ஜியும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கொண்டே இருக்கும். மேலும் ஷிகார் தவானின் குழந்தை புகைப்படம் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆவதும் வழக்கம்.
இந்நிலையில்தான் ஆயிஷா தவான் என்னும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிஷா டெலிட் செய்துள்ளார். அவர் ஆயிஷா முகர்ஜி என்னும் தன்னுடைய மற்றொரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து என்பது ஒரு கதை என்று நினைத்திருந்தேன், எனக்கு இரு முறை விவாகரத்து ஆகும் வரை’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் எனக்கு முதல்முறை விவாகரத்து ஆன போது மிகவும் பயந்தேன் என்றும், நான் மிகப்பெரிய தவறு செய்வதாக உணர்ந்தேன் என்றும், தற்போது இரண்டாவது முறையாக விவாகரத்து ஆனவுடன் முதல் முறை உணர்ந்ததை விட நூறு மடங்கு அதிகமான பயம், தோல்வி, ஏமாற்றத்தை உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் இப்போது முன்பைவிட தெம்பாக உணருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இப்படி பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ள ஆயிஷா, விவாகரத்து என்பது நான் தேர்ந்தெடுத்த திருமண வாழ்க்கைக்காக என்னை தியாகம் செய்து கொள்ளாமல் இருப்பது எனவும் குறிப்பிட்டுள்ளார் மேலும் நீங்கள் விவாகரத்து ஆனவரா? தனிமையாக உணர்கிறீர்களா? என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டு பின்னர் ஆஸ்திரேலியா சென்று செட்டில் ஆன ஆயிஷாவின் முதல் திருமணம் தோல்வியில் முடிவடைந்து தற்போது ஷிகர் தவான் உடனான இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஷிகர் தவானும் அதில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருப்பது தவான் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

















