சினிமா செய்திகள்
நாடு தனக்கென்ன செஞ்சதுன்னு ஒரு சோல்ஜர் யோசிக்க மாட்டான்: ‘பதான்’ டிரைலர்

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ என்ற திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வழியாக இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளின் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் இவற்றில் தமிழ் ட்ரைலர் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களை நடத்தும் தனியார் குரூப் ஒன்று இந்தியாவை தாக்க பெரும் பணம் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்தியாவை தாக்க திட்டமிடும் நிலையில் இந்த திட்டத்தை ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே எப்படி முறியடிக்காரர்கள் என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது
இரண்டு நிமிடங்களுக்கு மேல் இந்த ட்ரைலரில் ஒவ்வொரு காட்சிகளிலும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் ஏகப்பட்ட செலவுகள் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே ஒரு பக்கம் பாடல் காட்சிகளில் கிளாமர் கலக்கினாலும் இன்னொரு பக்கம் தன் தேசத்திற்காக தங்கள் உயிரையும் மதிக்காமல் செய்யும் வீர செயல்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகிய மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததை. காவி உடை அணிந்து ஆபாசமான போஸ்கள் கொடுத்த தீபிகா படுகோனுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் அதே தீபிகா தான் இந்த படத்தில் நாட்டை காப்பாற்றும் ஒரு போராளியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அடங்கி போவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் ஒரு தேசப்பற்றை வெளிப்படுத்தும் படமாகவும் இந்தியாவை தாக்க நினைக்கும் தீவிரவாதிகளை முறியடிக்கும் காட்சிகள் உள்ள ஒரு படமாகவும் ‘பதான்’ அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பாக இணையதளங்களில் வைரல் ஆகி வரும் இந்த படத்தின் டிரைலர் இதோ: