Connect with us

ஆரோக்கியம்

உடலில் உள்ள கொழுப்பை நீக்கும் ஏழு பழங்கள்

Published

on

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதற்கு இந்த 7 பழங்களைச் சாப்பிடுங்கள் போதும்.

1. பேரிக்காய் (தினம் ஒன்று)
2. ஸ்ட்ராபெர்ரி
3. ஆப்பிள் (தினம் ஒன்று)
4. கறுப்பு திராட்சை
5. வெண்ணெய் பழம்
6. எலுமிச்சை
7. பப்பாளி

பேரிக்காய்: (Pear)

அதிக அளவு வைட்டமின் `சி’ உள்ளது. பேரிக்காயைத் தோல் நீக்காமல் உண்ண வேண்டும். அதன் தோல் புற்றுநோய், இதய நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.

பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது பால் ஊற வைக்கும். சிறுநீரக செயல்பாட்டுக்கும் பேரிக்காய் நல்லது.

இதில் உள்ள கால்சியம், இரும்புச் சத்துக்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியமானது. பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

உடல் பருமனைக் குறைக்கப் பேரிக்காய் நல்லது. கெட்ட கொழுப்பை அகற்றவும் இது பயன்படுகிறது. மலச்சிக்கல், குடல் புண் உள்ளிட்ட பல நோய்களைக் குணப்படுத்தும்.

ஸ்ட்ராபெர்ரி: (strawberry)

ஸ்ட்ராபெரி பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. ஸ்ட்ராபெர்ரி இரத்த அழுத்தத்தைச் சரிசெய்கிறது. ஸ்ட்ராபெர்ரி 98 சதவிகிதம் வைடடமின் சி-யைப் பெற்றுள்ளது.

உங்கள் பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கவும் ஸ்ட்ராபெர்ரி உதவுகிறது. ஜீரண உறுப்புகளைச் சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும்.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையைச் சீர் செய்து, ரத்த செற்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.

ஆப்பிள்: (Apple)

ஆப்பிளில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளைப் பாதுகாப்பதில் வல்லவை. எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன.ஆப்பிள் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும். ஆப்பிளில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.

ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு. ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதாலும், ஜூஸாக்கி சாப்பிடுவதாலும் உடல் எடை குறைகிறது.

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றைச் சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.

கறுப்பு திராட்சை: (Black grapes)

தினமும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது பல்வேறு உடல் நலக்குறைபாடுகளைத் தவிர்க்கலாம். உங்கள் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துகின்றன.

திராட்சையுள்ள அதிகளவிலான “ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்” உதவுகின்றன. இவை புற்று நோய்க்கு எதிராகப் போராடி நமது உடல் நலனைப் பாதுகாக்கின்றன.

திராட்சைப் பழத்தைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது இரத்தத்திலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாகக் குறைத்து நமது உடலைச் சீராக்கும் பணியைச் செய்யும். இது உங்கள் எடையை நிர்வகிப்பதற்கும் சர்க்கத்தைப் பசியைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் பங்கு வகிக்கும்.

திராட்சையில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவுச் சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.

வெண்ணெய் பழம்: (avocado)

இந்த பழம் உடல் நலத்திற்கு அற்புதமான பலன்களைத் தருவதாகும். வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிகமான உள்ளன. இதில் மிகவும் அதிகமான கொழுப்புச் சத்தும் உள்ளது.

இதில் உள்ள கொழுப்புச்சத்து, இயற்கையாகவே தனித்துச் செறிவூட்டப்படுவதால் உடலுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளது. சில நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணங்களும் உள்ளன.

வெண்ணெய் பழம் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.

எலுமிச்சை: (Lemon)

எலுமிச்சை பழத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். எலுமிச்சை சாற்றில் அதிக அமிலத்தன்மை உள்ளது.

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றைச் சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.

உடலில் மேலும் அதிக வறட்சியை ஏற்படுத்தும். உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

பப்பாளி: (Papaya)

பப்பாளியில் உள்ள நார்ச் சத்து, கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது. உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து ஜலதோஷம், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன.

பப்பாளிப்பழம், இனிப்பான சுவையைத் தருவதோடு, கரோட்டின்ஸ், வைட்டமின் ஏ, பி, சி, ஈ, ஃப்ளாவனாய்ட்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது. புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது.

உடலில் கால்சியம் ஆக்சலேட்டின் அளவு அதிகரிக்கும். செரிமானம், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து என்று கூறப்படுகிறது. பப்பாளியைத் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வேலைவாய்ப்பு48 seconds ago

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு16 mins ago

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு25 mins ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு34 mins ago

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு42 mins ago

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு51 mins ago

Graduate முடித்தவர்களுக்கு பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

பேங்க் ஆஃப் பரோடா ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

ரூ.31,000 ஊதியத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 days ago

சத்துகள் மிகுந்த பாசிப் பயறு பயன்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 days ago

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை இன்று (22/11/2022) குறைந்தது.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

ஆரோக்கியம்3 days ago

இதனைச் சாப்பிட்டு வந்த உடலில் உள்ள நோய்கள் நீங்கும்!

டிவி6 days ago

இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் யார் தெரியுமா?

வேலைவாய்ப்பு3 days ago

IOB வங்கியில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 days ago

குளிர் காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளனும் வைத்துக்கொள்ள உதவும் 6 பழங்கள்!

வேலைவாய்ப்பு3 days ago

SSC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 24369 காலியிடங்கள்

வணிகம்2 days ago

மீண்டும் தங்கம் விலை உயர்வு (24/11/2022)!

ஆரோக்கியம்4 days ago

உடலில் உள்ள கொழுப்பை நீக்கும் ஏழு பழங்கள்

ஆரோக்கியம்4 days ago

மூளைக்கு பலம் தரும் இந்த வகை கீரை!