தமிழ்நாடு
பெரிய கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் விஷால்: சேரன் ஆவேசம்!

நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையில் விஷால் அணியும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் சேரன் நடிகர் விஷாலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலே சொல்லி, நின்று, ஜெயித்து, கெட்ட பெயர் வாங்கி ஒதுங்கிவிட்டார். இதற்கு மேலும் விஷாலுக்கு ஓட்டு போட்டால் நமக்கு சூடு சொரணை இல்லை என்று அர்த்தம் என விளாசினார் சேரன். மேலும் ஒரு பெரிய கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் விஷால் என விளாசினார்.
இந்தச் சங்கத்தில் ஒரு விண்ணப்பம் கொடுத்தால், அதற்கு பதில் கூட கொடுக்க முடியாத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இருந்தது. அவ்வளவு கேடு கெட்ட நிர்வாகமாக இருந்தது. மீண்டும் விஷால் தலைவராக நின்றாலே, ஒரு பெரிய போராட்டம் இருக்கிறது. எங்களுக்கு அவர் வேண்டாம் என்றார் சேரன். மேலும் நடிகர் சங்கத்துக்கு பாக்யராஜ் தலைவராக வரவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.














