இந்தியா
அதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்!

செப்டம்பர் மாதம் புதிய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பில் இந்தியா தான் முதலிடம் என்ற தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்ட நாடுகள், இறந்தவர்கள் நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 1 முதல் 15 வரையில், இந்தியாவில் அதிகபட்சமாக 13,08,991 நபர்களை கொரோனா பாதித்துள்ளது. தொடர்ந்து அடுத்த இடங்களில் அமெரிக்கா (5,57,657), பிரேசில் (4,83,299), அர்ஜெண்டினா (1,54,298), ஸ்பெயின் (1,30,872) ஆகிய நாடுகள் உள்ளன.
அதேபோல செப்டம்பர் 1 முதல் 15 தேதி வரையில் இந்தியாவில் (16,307) தான் கொரோனா பாதிப்புகளால் அதிகளவில் இறந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா (11,461), பிரேசில் (11,178), மெக்சிகோ (6,891), கொலம்பியா (3,759) ஆகிய நாடுகள் உள்ளன.












