இந்தியா
உலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா!

உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும் மனித மூலதன குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 174 நாடுகளில் கல்வி அறிவு பெற்ற குழந்தைகள் மற்றும் அவர்களது ஆரோக்கிய நிலையை வைத்து, உலக வங்கியின் மனித மூலதன குறியீடு பட்டியல் தயாரிக்கப்படும்.
அந்த வகையில் 2020-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள மனித மூலதன குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 116வது இடத்தை பிடித்துள்ளது.
மனித மூலதன மேம்பாட்டில் இந்தியாவின் பங்கு இந்த ஆண்டு 0.49 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பங்கு 0.41%, வங்க தேசம் பங்கு 0.46% ஆக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பு குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் குழந்தைகளின் கல்வி அறிவு மற்றும் ஆரோக்கியம் அதிகரித்து இருந்தது.
ஆனால் கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு குழந்தைகள் பள்ளிகளில் சேருவது, ஆரோக்கியம் போன்றவற்றில் பல்வேறு நாடுகள் பின்னடைவைச் சந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



















