Connect with us

சினிமா

செப்டம்பர் 2025 திரைப்பட வெளியீடுகள்: சிவகார்த்திகேயன், பவன் கல்யாண், கவின் உள்ளிட்ட பலரின் படங்கள் லிஸ்ட்!

Published

on

செப்டம்பர் மாதம் திரையுலக ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட மாதமாக அமைய இருக்கிறது. பல டாப் ஸ்டார்களின் புதிய படங்கள் வெளியாகவுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. குறிப்பாக தமிழ் சினிமாவில் செப்டம்பர் மாதத்தில் வெளியீடுகள் அதிகமாக உள்ளன.

👉 செப்டம்பர் 5 வெளியீடுகள்

  • மதராஸி – சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய படம். ஹீரோயினாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.

  • பேட் கேர்ள் – வர்ஷா பரத் இயக்கத்தில், வெற்றிமாறன் தயாரித்த படைப்பு. பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம்.

  • Ghatti – அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிப்பில் தமிழ்-தெலுங்கு படமாக உருவாகியிருக்கும் படம்.

  • காந்தி கண்ணாடி – KPY பாலா ஹீரோவாக நடித்துள்ள படம்.

👉 செப்டம்பர் 12 வெளியீடுகள்

  • மிராய் – தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம். மஞ்சு மனோஜ், தேஜா சாஜ்ஜா நடித்துள்ளனர்.

  • யோலோ – அதே தேதியில் வெளியாகும் மற்றொரு படம்.

  • பாம்ப் – அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம்.

  • குமாரா சம்பவம் – இதுவும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது.

👉 செப்டம்பர் 19 வெளியீடுகள்

  • கிஸ் – கவின் நடித்த படம்.

  • தண்டகாரண்யம் – கெத்து தினேஷ் இயக்கத்தில் வெளியாகும் படம்.

  • சக்தி திருமகன் – விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம்.

👉 செப்டம்பர் 25 வெளியீடுகள்

  • OG – பவன் கல்யாணின் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படம்.

  • பல்டி – விளையாட்டு பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் படம்.

செப்டம்பர் மாதம் முழுவதும் ரசிகர்களுக்கு பல்வேறு வகையான படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கின்றன.

Translate »
Strong contextual links.