சினிமா செய்திகள்
’ரைட்டர்’ எப்படி தன்னோட வீட்ல ’ஆனந்தமா விளையாட முடியும்? இயக்குனர் சீனுராமசாமி புலம்பல்

நல்ல தமிழ் படங்கள் வெளியாகும்போது ஆங்கில படங்கள் மற்றும் பிற மொழி படங்கள் வெளியாகி தமிழ் படங்களின் வசூலை பாதிக்கிறது என இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் புலம்பியுள்ளார்.
சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களான ’ரைட்டர்’ மற்றும் ’ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகியவை நல்ல படங்கள் என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் அந்த படங்களுக்கு சுத்தமாக தியேட்டரில் பார்க்க ஆளில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம் ஸ்பைடர்மேன், 83, புஷ்பா, மேட்ரிக்ஸ் ஆகிய ஆங்கிலம் மற்றும் பிற மொழி படங்கள் சூப்பர் ஹிட்டாகியதை அடுத்து அந்த படங்களுக்கு தான் கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கேரளா கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் படங்கள் வெளியாகும்போது அவர்கள் முன்னுரிமை தருவது போல தமிழ்நாட்டு படங்கள் வெளியாகும்போது தமிழ் படங்களுக்கு முதல் முக்கியத்துவம் தரவேண்டும்
மாற்றுமொழி டப்பிங்& ஆங்கிலப்படங்கள் தனியாக திரையிட கால அட்டவணையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்க வேண்டும். ஒரே நேரத்துல மூனு டப்பிங் மற்றும் ஆங்கில படங்கள் அதிக விளம்பரத்தோட வந்தா இங்க இருக்கிற ‘ரைட்டர்’ எப்படி தன்னோட வீட்ல ஆனந்தமா விளையாட முடியும்?
சிலந்தி கூடு கட்டிராதா?
எல்லாத்தையும் ஒரே நேரத்துல விடாம ஒவ்வொன்னா கூட விடுங்க இது பத்தி யோசிக்கலமா? அவ்வளவுதான் ஏ கேள்வி..!!
இயக்குனர் சீனுராமசாமியின் இந்த கேள்வியை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் இதற்கு தீர்வு காணுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.















