Connect with us

தமிழ்நாடு

பதவியேற்ற முதல் நாளே மு.க.ஸ்டாலினுக்கு சீமானின் சரமாரி கேள்வி..!

Published

on

தமிழக அரசின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்படி பதவியேற்ற அவர், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் அதிக கட்டுப்பாடுகள் கொண்ட ஊடரங்கு அமலுக்கு வந்தது. அதன்படி மதியம் 12 மணிக்கு மேல் அத்தியாவசியக் கடைகள் கூட திறந்திருக்க அனுமதி கிடையாது. தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே நேரில் வந்து வேலை செய்ய வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகள் பிறக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்றாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பது அவசியமா என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

‘காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள், தேநீர் கடைகள் போன்ற அத்தியாவசியக்கடைகள் மதியம் 12 மணிக்கே மூடப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருப்பது மிகத்தவறான நிர்வாக முடிவாகும். கொரோனா வீரியம்பெற்றுப் பரவிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் கட்டுப்பாடும், விதிகளும் அவசியமென்றாலும்கூட அதற்காகத் தொலைநோக்குப் பார்வையின்றிக் கண்மூடித்தனமாக விதிகளைக் கொண்டு வந்து மக்களை முடக்குவது ஏற்கத்தக்கதல்ல. நிரந்தரமான வருமானமோ, மாதாந்திர ஊதியமோ இன்றி அமைப்புசாராத் தொழிலாளர்களாகப் பணியாற்றும் அடித்தட்டு உழைக்கும் மக்களும், அன்றாடங்காய்ச்சிகளும் அன்றைக்கு உழைத்து கிடைக்கிற சிறுதொகையைக் கொண்டுதான் அன்று அன்றைக்குச் சமைத்துண்ணுகிறார்கள். அத்தகைய மக்கள் உழைத்து ஊதியம்பெற்று வீடு திரும்பவே மாலை 6 மணிக்கு மேலாகும் எனும்போது, பகல் 12 மணிக்கே கடைகளை மூடுவது அவர்களை வெகுவாகப் பாதிக்கும். இத்தகைய பரந்துபட்டப் பார்வையின்றிப் பொத்தாம் பொதுவாக முடிவெடுத்து மேம்போக்காக அணுகுவது மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

அதுமட்டுமின்றி, குறைவான நேரமே கடைகள் இயங்கும் எனும் அறிவிப்பு மக்களைப் பீதியடையச் செய்து, முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கவும், நெருக்கிக் கொண்டு தனிநபர் இடைவெளியைத் தகர்க்கவும் பெரும் வாய்ப்பாக மாறிப்போகும். அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிற காய்கறிக் கடைகளுக்கும், மளிகைக் கடைகளுக்கும் இவ்வளவு கட்டுப்பாட்டை விதித்திருக்கிற தமிழக அரசு, மதுபானக்கடையை ஏன் இன்னும் திறந்து வைத்திருக்கிறது? என்பதற்குப் பதிலில்லை. மனித உயிர்க்குடிக்கும் மதுபானக்கடைகளை இப்பேரிடர் காலத்தில் முழுநேரமும் மூடுவதில் அரசுக்கு என்ன தயக்கம்? என்பது புரியவில்லை.

ஊரடங்குக்காலக்கட்டத்தில் ஊதியமும், வருமானமும் பெரியளவு இல்லாத இத்தருணத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்திருப்பது உழைக்கும் மக்களின் சிறுஊதியத்தையும் உறிஞ்சத்தானே வழிவகுக்கும்? கடந்தாண்டு கொரோனா ஊரடங்குக்காலத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து அவற்றை மூடக்கோரி வீட்டுவாசலில் கறுப்புக்கொடியேந்திப் போராடிய ஐயா ஸ்டாலின், இன்றைக்குத் தனது அரசு பதவியேற்கையில் கொரோனா தொற்று முன்பைவிட வீரியமாகப் பரவி உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கும்போது மதுபானக்கடைகளை மூடுவதற்குத் தயங்குவது ஏன்? என்பது முற்றிலும் விந்தையாக உள்ளது. ஆட்சியதிகாரத்தில் ஏறுவதற்கான அதிகாரப்பூர்வப் பதவியேற்பு நடைபெறுவதற்கு முன்பே, அதிகாரிகளை அழைத்து ஆலோசித்து அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்ட ஐயா ஸ்டாலின், மதுபானக்கடைகளைத் மூடாது திறந்து வைத்து வேடிக்கைப் பார்ப்பது மிக மோசமான அணுகுமுறையாகும்.

ஆகவே, ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குத் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய அக்கடைகளின் நேரத்தை மாலை 6 மணிவரை நீட்டிப்புச் செய்ய வேண்டும் எனவும், மதுபானக்கடைகளை ஊரடங்குக்காலத்தில் கட்டாயம் மூட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Seo branding contenu. Virtual cfo services for strategic financial management. Att bygga din egen bokhylla är ett roligt och givande projekt som ger dig möjlighet att skapa en unik möbel för ditt hem..