தமிழ்நாடு
மக்களுக்கு உதவி செய்வதற்காக வெள்ளத்தில் நீந்தி வந்திருக்கிறேன்: சசிகலா பேச்சு!

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமன்றி அரசியல் கட்சிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லி நிவாரண உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்ளும் சசிகலா அவர்களும் இன்று மக்களை நேரில் சந்தித்தார். தனது வீட்டைச் சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீர் வெள்ளத்தில் நீந்தி மக்களை பார்க்க வந்துள்ளதாக சசிகலா பொதுமக்களிடம் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட சசிகலா 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் வீடுகளை ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் அவர் மக்களிடையே பேசியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நேரில் பார்த்து தெரிந்துகொண்டேன்.
பலருடைய வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் வெள்ளம் போல் இருக்கிறது. உங்களை எல்லாம் நேரில் பார்த்து அம்மாவுக்கு சொன்ன வாக்கை காப்பாற்ற என்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சி செய்கிறேன், இனியும் செய்வேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்’ என்றும் அவர் கூறினார்.
















