தமிழ்நாடு
இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம்!

இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பதும் இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளம் சூழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெள்ளத்தில் இருந்து தற்போது தான் பொது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்தம் தோன்றியுள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பு ஒன்றில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் அந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும் அடியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

















