தமிழ்நாடு
சசிகலாவின் சொத்துக்களும் அரசுடமையாக்கம்: தமிழக அரசு அதிரடி!

ஏற்கனவே தமிழக அரசு இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துக்களை அரசுடமையாக்கிய நிலையில் தற்போது சசிகலாவின் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் தற்போது விடுதலையாகி விட்டனர். அபராத தொகையை கட்டாததால் இன்னும் சுதாகரன் மட்டும் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்களுக்கு சொந்தமான ஒரு சில சொத்துக்களை சமீபத்தில் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த சொத்துக்கள் அரசுடமை ஆக்கியதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துக்களை அடுத்து சசிகலாவின் ஒரு சில சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டது என தமிழக அரசு அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை, மற்றும் குடியிருப்புகளை அரசுடமை ஆக்கி உள்ளதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தா என்பவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலாவின் சொத்துக்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது






