Connect with us

சினிமா செய்திகள்

அடுத்தவனை மிதிச்சு முன்னேறணும்னு நினைக்காதீங்க: புளுசட்டை மாறன் விமர்சனத்திற்கு நடிகரின் பதிலடி

Published

on

வலிமை திரைப்படத்தை மோசமாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த நடிகர் ஜான் கொக்கெனா அடுத்தவனை மிதித்து வாழணும்னு நினைக்காதீங்க என்று பதிலடி கூறியுள்ளார். அது குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது

அடுத்தவனை மிதித்து முன்னேற வேண்டும் என்று நினைக்க வேண்டாம் என புளூசட்டை மாறனுக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர் அறிவுரை கூறியுள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீங்கள்‌ ஒரு பெரிய திரை விமர்சகர்‌. நான்‌ ஒரு சாதாரண நடிகன்‌. தமிழ்‌ சினிமாவில்‌ சமீபத்தில்‌ வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில்‌ ஒரு சிறிய கதாபாத்திரத்தில்‌ நடித்தவன்‌. எனக்கு உங்களிடம்‌ நீங்கள்‌ விமர்சனம்‌ செய்வது குறித்து ஒரு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது

சினிமா இருந்தால்‌ நீங்களும்‌ இருக்கிறீர்கள்‌ சினிமா என்றாலே விமர்சனமும்‌ சேர்ந்ததுதான்‌. விமர்சனம்‌ சினிமாவை வளர வைப்பது அதனாலேயே சினிமா விமர்சகன்‌ மதிக்கப்படுகிறான்‌. குறைகளைச்‌ சுட்டிக்காட்டுவது எந்த அளவு தேவையோ அதே அளவு பிறரை மரியாதையாகப்‌ பேசுவதும்‌ தேவை. சினிமாவில்‌ உழைப்பவர்கள்‌ பலரும்‌ தங்கள்‌ ஈடுபாட்டை, அர்ப்பணிப்பைக்‌ கொடுத்து உழைப்பவர்கள்‌. பெரிய பெரிய இயக்குனர்கள்‌, நடிகர்கள்‌, சூப்பர்‌ ஸ்டார்கள்‌ பணியாற்றுகிறார்கள்‌. அவர்கள்‌ தங்களை இந்த அடையாளங்களில்‌ நிலை நிறுத்த எத்தனை போராடியிருப்பார்கள்‌ என்று உங்களுக்குத்‌ தெரியும்‌

ஒரு நடிகர்‌ சூப்பர்‌ ஸ்டார்‌ ஆவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு அந்த இடத்திற்கு வந்திருப்பார்‌ என்பது உங்களுக்கே தெரியும்‌. முதலில்‌ நடிகராகத்‌ தன்னை மக்கள்‌ முன்‌ நிரூபித்த பிறகே அவர்கள்‌ சூப்பர்‌ ஸ்டார்‌ ஆகிறார்கள்‌. அவர்களைபற்றி விமர்சனம்‌ செய்யும்போதாவது நாகரீகமாக விமர்சனம்‌ செய்யுங்கள்‌ என்பதே என்‌ கோரிக்கை

நீங்களும்‌ ஒரு படம்‌ இயக்கி இருக்கிறீர்கள்‌. அதன்‌ வலி, வேதனை என்னவென்று உங்களுக்கும்‌ புரியும்‌. எந்தப்‌ படைப்பாளியுமே தன்‌ படைப்பு வெற்றி பெறவேண்டும்‌ என்று நினைத்தே படைப்பார்கள்‌. இந்தக்‌ கொரோனா அலையில்‌ படப்பிடிப்பு நடத்தி திரைக்குக்‌ கொண்டுவருவது எவ்வளவு சிரமம்‌ என்பதை அறிந்தவர்‌ நீங்கள்‌. அது மக்களைச்‌ சென்று சேருவது எளிதானது இல்லை. சினிமா எதிர்பார்ப்பதுபோல நடப்பதில்லை. கதைகள்‌ சில நேரம்‌ பிடிக்கும்‌, பிடிக்காமல்‌ போகும்‌. அப்படித்தான்‌ சினிமா நீங்கள்‌ விமர்சனம்‌ செய்யுங்கள்‌. தொழில்‌ நுட்பங்களை முன்னிறுத்தி விமர்சனம்‌ செய்யுங்கள்.‌ தமிழ்‌ சினிமாவைப்‌ புரிந்து விமர்சனம்‌ செய்யுங்கள்‌. ஆனால்‌ யாரையும்‌ தனிப்பட்ட முறையில்‌ கேவலமாகப்‌ பேசுவதைத்‌ தவிர்த்து மரியாதையுடன்‌ விமர்சியுங்கள்‌.

இதுவரை நீங்கள்‌ மோசமாக, கேவலமாகப்‌ பேசிய விமர்சனங்கள்தான்‌ அதிகம்‌ இருக்கின்றன. அது ஒன்றும்‌ பெரிய விஷயமில்லை யார்‌ வேண்டுமானாலும்‌ பேசி விடலாம்‌. திறமையாகப்‌ பேசுவதுதான்‌ கடினம்‌. அப்படி நீங்கள்‌ மட்டமான சொற்களால்‌ விமர்சிப்பது, மட்டமான சினிமா என்று சொல்லாமல்‌ விமர்சனத்தையே மட்டமானது என்று ஆக்கிவிடும்‌. உங்கள்‌ பின்னால்‌ வரும்‌ விமர்சகர்களுக்கும்‌ மரியாதையை மக்களிடையே குறைத்துவிடும்‌. தமிழில்‌ நல்ல சொற்கள்‌ பல லட்சம்‌ இருக்கின்றன. அவற்றைக்‌ கொண்டு நல்ல, மரியாதையான சொற்களால்‌ நாகரீக விமர்சனம்‌ செய்யுங்கள்‌. பிறரை உங்கள்‌ பக்கம்‌ திருப்புவதற்காக, ஈர்ப்பதற்காக இல்லாமல்‌ எல்லோருக்கும்‌ வெற்றியைத்‌ தரும்படி விமர்சியுங்கள்‌.

இங்கே சினிமாவை நம்பி, சினிமாவில்‌ நிற்க வேண்டும்‌ என்று என்னைப்போன்று பலர்‌ இருக்கிறார்கள்‌. அவர்களும்‌ வளர வேண்டும்‌. சினிமா இருந்தால்தான்‌ இது எல்லாமே. அதனால்‌ அடுத்து நீங்கள்‌ விமர்சனம்‌ செய்யும்போது ஆக்கப்பூர்வமாக விமர்சனம்‌ செய்வது நல்லது. உங்களால்‌ பலரும்‌ வாழ வேண்டும்‌. நீங்களும்‌ நன்றாக இருக்க வேண்டும்‌. சினிமாவில்‌ எத்தனை துறைகள்‌ இருக்கின்றன? அதில்‌ எத்தனை பேர்‌ பணிபுரிகிறார்கள்‌? எத்தனை குடும்பங்கள்‌ வாழ்கின்றன? பல பேர்‌ சாதிக்க நினைத்து வந்து பாதியில்‌ போகிறார்கள்‌. அதிலும்‌ மீண்டு வருபவர்கள்தான்‌ மக்கள்‌ முன்‌ பெயருடன்‌ நிற்கிறார்கள்‌. அதையெல்லாம்‌ நீங்கள்‌ நினைக்க வேண்டும்‌. தங்களின்‌ விமர்சனங்கள்‌ படைப்பாளிக்கு ஊக்கமாக இருக்கவேண்டுமே தவிர அவர்களைப்‌ புண்படுத்தும்‌ விதமாகவோ, திரைப்படத்திற்கு வரும்‌ ரசிகர்களைத்‌ தடுக்கும்‌ விதமாகவோ இருக்கக்கூடாது. நீங்கள்‌ இதைப்‌ புரிந்து நடப்பீர்கள்‌ என்று நம்புகிறேன்‌. இது சினிமாவில்‌ இருக்கும்‌ ஒரு சிறிய நடிகனாகிய என்‌ கோரிக்கை.

நான்‌ அஜித்‌ சாரின்‌ பெரிய ரசிகன்‌. அவர்‌ ஸ்டைலிலேயே இறுதியாக ஒன்று

நீங்க என்ன வேணா பண்ணுங்க.
உங்களுக்குப்‌ புடிச்சத பண்ணுங்க.
ஆனா அடுத்தவனை மிதிச்சு முன்னேறணும்னு நினைக்காதீங்க.
வாழு! வாழவிடு!

இவ்வாறு நடிகர் ஜான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

Translate »
專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. © 2013 2026 cinemagene. קריות והסביבה סבטלנה – נערות ליווי בבית שאן.