தொழில்நுட்பம்
தொழிலதிபர்கள் பயன்படுத்தும் பக்கா சாம்சங் லேப்டாப்: என்ன விலை தெரியுமா?

சாம்சங் நிறுவனம் பல்வேறு வகை மாடல் லேப்டாப்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தொழிலதிபர்களுக்கு என பிரத்தியேகமாக புதிய லேப்டாப் மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப் குறித்து தற்போது பார்ப்போம்
சாம்சங் கேலக்ஸி புக் பிசினஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி புக் புரோபஷனல் ஆகிய இரண்டு மாடலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப், தொழிலதிபர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப்பிற்கு இணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது
கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு தேவையான டூல்ஸ் ஆகியவை இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட இரண்டு வகை லேப்டாப் மாடலிலும் இன்டெல் 11வது தலைமுறையின் ப்ராசஸ் அமைக்கப்பட்டுள்ளது என்பதும், இன்டல் ஈகோ சர்டிபிகேட் பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள இந்த மாடல் லேப்டாப் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என்பது குறிப்பிடதக்கது
15.6 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 1920×1080 பிக்ஸல் திரை ரெசல்யூசன், 4ஜிபி ராம், கோர் ஐ3 ப்ராசசர், விண்டோஸ் 10 இயங்குதளம் மேலும் விண்டோஸ் 11கான புதுப்பித்தல் ஆகிய அம்சங்கள் இந்த புதிய லேப்டாப் மாடலின் உள்ளது. மேலும் கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதால் தொழிலதிபருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பிங்சர்ப்ரின்ட் ரீடர் வசதியுடன் 256 ஜிபி அளவிலான எஸ்எஸ்டி சேமிப்பு வசதிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் 13.3 இன்ச் மாடல் லேப்டாப் இந்திய மதிப்பில் 80,800 என்றும், 15.6 இன்ச் லேப்டாப்பானது இந்திய மதிப்பில் சுமார் 88,100 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. அமோல்டு டிஸ்ப்ளே வசதி, 1920×1080 திரை ரெசலியூசன் , கோர் ஐ3 புராஸசர், விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் ஆகிய அம்சங்களும் இந்த லேப்டாப்பில் உள்ளது.



















