Connect with us

தமிழ்நாடு

அண்ணன் ஓபிஎஸ் தாயார் மறைவு வருத்தமளிக்கிறது: ஈபிஎஸ் இரங்கல்!

Published

on

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று முன்தினம் இரவு இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், சசிகலா, தினகரன், சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பாரா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் அவர் செய்தியாளர் மத்தியில் தனது இரங்கலை தெரிவித்தார்.

#image_title

கடந்த 23-ஆம் தேதி ஓபிஎஸ் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேரில் சென்று சந்தித்து மருத்துவர்களிடம் விசாரித்துவிட்டு சென்னை திரும்பினார் ஓபிஎஸ். இந்நிலையில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் இருந்த அவரது தாயார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இந்த மறைவு செய்தியை கேட்ட ஓபிஎஸ் மீண்டும் சென்னையில் இருந்து தேனி பெரியகுளத்துக்கு விரைந்தார்.

அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தனது தாயை பார்த்து கண்கலங்கி நின்ற ஓபிஎஸ் சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவரது கால்களைப் பிடித்து கதறி அழுதார். இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தநிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது அரசியல் எதிரி எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் தாயார் மறைவு குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு வருத்தமளிக்கிறது. தாயாரை இழந்து வாடும் அண்ணன் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என கூறினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized22 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
visible in ai chats like chatgpt.