உலகம்
இந்தியா புறக்கணித்தும் நிறைவேறிய தீர்மானம்: ஐநாவில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட்
ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து வாக்களிக்காமல் வெளியேறிய போதிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐநாவில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துவரும் ரஷ்யா மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார தடைகள் உள்பட பல தடைகள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஐநாவின் மனித உரிமை கமிஷனில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு அளித்த போதிலும் இந்தியா உட்பட ஒரு சில நாடுகள் இந்த தீர்மானத்தை புறக்கணித்து வெளியேறியன. ஆனால் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததால் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப் போவதாக அறிவிக்கபப்ட்டது. இது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.