இந்தியா
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை முந்திய அதானி.. என்ன இடம் தெரியுமா?

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 116.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தை அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பிடித்துள்ளார்.
ஆரக்கிள் இணை நிறுவனர் லேரி எலிசன் மற்றும் கூகுள் இணை நிறுவனர்கள் சினர்ஜி பிரின் மற்றும் லேரி பேஜ் உள்ளிட்டவர்களையும் கவுதம் அதானி முந்தியுள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் என கூறப்பட்டு வந்த முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக அதானி இந்த பட்டியலில் முன்னேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் 219 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 171 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல், 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் முதல் முறையாக 200 பில்லியன் டாலர்களை கடந்தது 201 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இந்திய நிறுவனங்களில் அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனமாக 320 பில்லியன் டாலருடன் டாடா குழுமம் உள்ளது. தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 237 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை அதானி குழுமம் பிடித்துள்ளது.