Connect with us

இந்தியா

கரூர் வைஸ்யா வங்கிக்கு ரூ.30 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா?

Published

on

தமிழகத்தில் உள்ள கரூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளாக கொண்டு இயங்கி வரும் வங்கி கரூர் வைஸ்யா வங்கி. குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக கிளைகளை தொடங்கி இருக்கும் வங்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கரூர் வைஸ்யா வங்கிக்கு ரூபாய் 30 லட்சம் அபராதமாக விதித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கின்றதா என்பதை கண்காணித்து வருகிறது என்பதும் வங்கி நிர்வாகம் மெத்தனமாக இருக்கும் போது விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அபராதமும் விதித்து வருகிறது என்பதை தெரிந்ததே.

rbi

ஏற்கனவே கடந்த சில வாரங்களில் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கரூர் வைஸ்யா வங்கிக்கும் அபராதம் விதித்துள்ளது. கரூர் வைஸ்யா வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை விதிகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் இந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி வரையில் இந்த வங்கியினை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி சில கணக்குகளை மோசடி என முடிவு செய்துள்ளது என்றும் ஆனால் அதனை ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்க தவறிவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த விதிமுறை மீறல் காரணத்திற்காக கரூர் வைஸ்யா வங்கிக்கு 30 லட்சம் ரூபாய் அபராதத்தை இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு பின்னரே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது ஆனால் அதே நேரத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?