Connect with us

இந்தியா

கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் – 4ம் தேதி இலங்கை செல்லும் மோடியின் கையில் பந்தினை கொடுத்தார் ஸ்டாலின்.

Published

on

இரண்டு நாள் அரசியல் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 மற்றும் 5ம் தேதிகளில் இலங்கையில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் இலங்கை செல்லும் மோடி நினைவில் வைத்து விவாதிக்க வேண்டிய விடயமாக கச்சத்தீவு மீட்புப் பிரச்னையை எழுப்பிட ஒரு நிர்ப்பந்தம் தரும் வகையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் உள்ள அணைத்துக் கட்சிகளும் பாஜக உட்பட ஆதரித்து ஒரு தீர்மானம் இயற்றி வரலாற்றில் இடம் பிடித்தார் முதல்வர் ஸ்டாலின்.

1974ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அப்போதைய தமிழக திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க எத்தனித்த போது அதற்கு எதிராக முதல்வராக இருந்த கருணாநிதி சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் இயற்றியதோடு மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த எதிர்ப்புகளையெல்லாம் உதாசீனப்படுத்திய இந்திரகாந்தி இலங்கை அரசுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். 1975ல் எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976ல் அப்போதைய வெளியுறவு அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானை வைத்து இலங்கைக்கு ஒரு கடிதத்தை அனுப்பி இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் உரிமையை இலங்கையிடம் அடகு வைத்தார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டவற்றையே ஒரு ஒப்பந்தமாக்கி இரண்டாவது ஒப்பந்தத்தையும் நிறைவு செய்தார். அந்த இரண்டாவது ஒப்பந்தத்திற்கு 1977ல் தமிழ்நாட்டில் முதல்வர் பொறுப்பேற்ற எம்ஜிஆர் ஒப்புக் கொண்டு கையொப்பமிட்டார். இன்று வரை தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வில் அழியாத வடுக்களை இப்பிரச்னை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், இந்த கசப்பான பிரச்னையில் கருணாநிதியின் பெயர் தவறாகவே இன்றளவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பின்னாளில் முதல்வராக வந்த ஜெயலலிதா இந்த பிரச்னையில் அவ்வப்போது குரல் கொடுத்துவிட்டு அமைதி காத்து விட்டார்.

இந்த நிலையில் தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டவும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும் என்பதனால் தமிழக அணைத்துக் கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் அரசின் தனித்தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். பின்னர் இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது பந்து இலங்கை செல்லும் மோடியின் கையில் இருக்கிறது. அவர் எப்படி விளையாட இருக்கிறார் என்பதை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Sit amet consectetur. Link.