இந்தியா
மீண்டும் ‘கேம்பா கோலா’ களமிறக்கும் ரிலையன்ஸ் … கோலா, பெப்சிக்கு போட்டியா?

கடந்த 80கல் மற்றும் 90களில் பிரபலமாக இருந்து அதன் பின்னர் படிப்படியாக சந்தையிலிருந்து காணாமல் போன கேம்பா கோலாவை மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனம் களமிறக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்று முதல் இந்த குளிர்பானம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது கோகோ கோலா, பெப்சி ஆகிய இரண்டு பிராண்டுகள் மிகப்பெரிய அளவில் நுகர்வோர் சந்தையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த 80களில் கேம்பா கோலா’ மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. இந்த நிலையில் கோகோ கோலா பெப்சியைவிட மிகப்பெரிய அளவில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் போய்ச் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து அதன் பின்னர் சந்தையில் இருந்தே காணாமல் போய்விட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் நிறுவனம் கேம்பா கோலா’நிறுவனத்தை ரூ.22 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு இந்த பிராண்டுகளை சந்தையில் இறக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்ட நிலையில் ஒரு சில நிர்வாக காரணங்கள் காரணமாக அறிமுகம் செய்வது தள்ளி போனது.
தற்போது நேற்று முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடைல் ஸ்டோர்கள், ஜியோ மார்ட் உள்பட அனைத்து சாதாரண மளிகை கடைகளிலும் பெட்டிக்கடைகளிலும் இந்த குளிர்பானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பல சுகமான அனுபவங்களை கண்ட இந்த குளிர்பானம் தற்போது கேம்பா ஆரஞ்சு மற்றும் கேம்பா லெமன் ஆகிய மூன்று சுவைகளுடன் மீண்டும் வணிகத்தில் உள்ளது.
200 மில்லி, 500 மில்லி, 600 மில்லி, 1000 மில்லி, மற்றும் 2000 மில்லி என ஐந்து வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் இந்த தயாரிப்பு சிறந்த இந்திய சுவையைக் கொண்டது என்றும் இந்த பிராண்டுக்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கேம்பா கோலா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கேம்பாவை அதன் புதிய அவதாரத்தில் வழங்கி புதிய உற்சாகத்தை நுகர்வோர்களுக்கு தரும் என்று நாங்கள் நம்புகிறோம். 80s கிட்ஸ் அசல் காம்பாவின் இனிமையான நினைவுகளைக் கொண்டிருப்பார்கள் என்பதால் இந்த மிருதுவான, புத்துணர்ச்சியூட்டும் சுவையை விரும்புவார்கள்.”
வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தை அதிக நுகர்வு சந்தர்ப்பங்களை கொண்டு வருவதால், காம்பாவை மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம், இது எங்களின் விரிவடைந்து வரும் எஃப்எம்சிஜி வணிகத்திற்கான மற்றொரு தைரியமான படியாகும்’ என்று தெரிவித்தார்.