Connect with us

சினிமா

ராட்சசன் விமர்சனம்!

Published

on

முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில், சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ராட்சசன். ராட்சனை தேடி வதம் செய்கிறாரா போலீஸ் விஷ்ணு விஷால் என்பதை விறுவிறுப்பு குறையாமல், நேர்த்தியான திரைக்கதை மற்றும் ஆழமான காட்சிகள் மூலம் மூன்று மணி நேரம் நம்மை கட்டிப் போட்டு, தனக்கு இப்படியும் படம் எடுக்க தெரியும் என நிரூபித்துள்ளார் இயக்குநர் ராம்குமார். சபாஷ் சார்!

முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு, இயக்குநர் ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ராட்சசன். இப்படத்தில், நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டியில், காமெடியில் கலக்கிய முனிஷ்காந்த், ராட்சசனில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட்டின் நடிப்பு அற்புதம்.

யார் ராட்சசன்?

சினிமா இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில், உலகின் தலை சிறந்த சைக்கோ த்ரில்லர் வழக்குகளை ஆவணப்படுத்தி வரும் நாளைய இயக்குநராக விஷால் அறிமுகமாகிறார். என்னடா டிரெய்லரில் போலீஸாக வருகிறாரே? என்று கேள்வி எழுப்புபவர்கள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ..

இயக்குநராக ஆகவேண்டும் என்ற ஆசையில், வலம் வரும் விஷ்ணு விஷாலின், போலீஸ் தந்தை இறந்து விட, குடும்ப சூழல் காரணமாக போலீஸாக மாறுகிறார் விஷ்ணு. அட இது நல்லா இருக்கே!

சென்னையில், தொடர்ந்து பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர். இந்த கேஸ் தமிழக காவல் துறைக்கு பெரிய சவாலாக அமைகிறது. இந்த வழக்கை விசாரிக்க, சினிமா இயக்குநராக ஆவதற்கு, விஷ்ணு ஆவணப்படுத்திய கேஸ்கள் பயன்படுகின்றது. அதனை கொண்டு, பள்ளி மாணவிகளை கடத்தி கொல்லும், ராட்சசனை விஷ்ணு கண்டுபிடிக்கிறாரா? கண்டு பிடித்து வதம் செய்கிறாரா? இல்லை ராட்சசன் தப்பிக்கிறானா? என்ற கிளைமேக்சுடன் மூன்று மணி நேர சினிமா, சிறிதும் போர் அடிக்காமல், நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு செல்கிறது.

ராட்சசன் படம் சில இடங்களில் கொரியன் படமான மெமரிஸ் ஆஃப் மர்டரை நினைவுப் படுத்துகிறது. இந்த படத்தை வைத்துத் தான் மிஷ்கின் யுத்தம் செய் படத்தை இயக்கியது வேறு கதை. சைக்கோ படங்கள் என்றாலே உலக அளவில் கொரியன் படங்களுக்குத்தான் மவுசு. கேங்க்ஸ்டர் படங்களும் அது போன்று தான். நான் செக்கச் சிவந்த வானத்தை குறிப்பிடவில்லை. வெளி நாட்டு சினிமாவை பார்த்து வளரும் இளம் இயக்குநர்கள் தமிழில் அதை செய்ய வேண்டும் என முயற்சி செய்வதை இன்ஸ்பிரேஷன் என்றே எடுத்துக் கொள்ளலாம். ஜாம்பவான்களே காப்பி அடிக்கும் போது, ஒரு சில காட்சிகளை எடுப்பது பெரிய குற்றமல்ல என்றே தோன்றுகிறது.

படத்தில் தலைமை ஆசிரியராக வரும் ஒரு ராட்சசன், மாணவிகளை எப்படி பாலியல் தொல்லைக்கு அழைக்கிறான் என்ற காட்சி, பெற்றோர்களை பதபதைக்க வைக்கிறது.

ராட்சசன் மார்க்: 65/100.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Translate »
Inactive sites are removed after 14 days and the network is compressed, so your matrix stays clean and full..