சினிமா
செல்பி எடுத்த ரசிகர்.. கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்த பாலிவுட் நடிகர்.. இது அதுல்ல?

இளம் பாலிவுட் நடிகரும் நடிகை ஆலியா பட் கணவருமான ரன்பீர் கபூர் கோபத்தில் ரசிகர் ஒருவரின் செல்போனை தூக்கி வீசிய சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் திடீரென அந்த வீடியோ வைரலான நிலையில் பாலிவுட் ரசிகர்கள் #angryranbirkapoor என்கிற ஹாஷ்டேக்கை போட்டு ரன்பீர் கபூருக்கு அறிவில்லையா? என விளாசி வருகின்றனர்.

#image_title
ஆசை ஆசையாக தனது ஹீரோவை பார்த்த பூரிப்பில் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள இளைஞர் ஒருவரு விருப்பப்பட்ட நிலையில், முதலில் ரன்பீர் கபூரும் செம கூலாக ஸ்மைல் செய்து அந்த இளைஞரின் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார்.
ஆனால், மீண்டும் மீண்டும் ரசிகர் போட்டோ எடுக்க முயன்ற நிலையில், கடுப்பான ரன்பீர் கபூர் தம்பி உன் போனை கொண்டா, நான் சூப்பரா எடுக்கிறேன் என்பது போல வாங்கிவிட்டு அப்படியே பின்னாடி தூரத் தூக்கிப் போட்ட வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

#image_title
கடந்த ஆண்டு பிரம்மாஸ்திரா படத்தை எடுத்து பாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த ரன்பீர் கபூர் ரசிகர்கள் முன்னிலையில் இப்படி ஆத்திரத்துடன் நடந்து கொண்டிருக்கக் கூடாது என்றும் இதே ரசிகை யாராவது செல்ஃபி எடுத்தால் இப்படியா செய்திருப்பார். அசடு வழிந்து நின்றிருக்க மாட்டார் என நெட்டிசன்கள் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.
He has done such a bad thing !! I’m so sad #angryranbirkapoor pic.twitter.com/Og2yloar2V
— Sooyaaa (@PriyamD03769594) January 27, 2023
இந்த மாதிரி சம்பவம் தமிழ்நாட்டில நடிகர் சிவகுமார், அஜித் குமார் உள்ளிட்ட பலரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனால், பாலிவுட்டில் இதுதான் ஃபர்ஸ்ட் டைம் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.