சினிமா
’நான் இன்னும் கனவில் இருக்கிறேன்‘- ராம்சரண் நெகிழ்ச்சி!

ஆஸ்கர் விருது வென்றது குறித்து ராம்சரண் நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ராஜமெளலி இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ பாடல் சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது வென்றது. இந்த விருதினை இதன் இசையமைப்பாளரான கீரவாணி பெற்றுக் கொண்டார். இதற்கு முன்பு ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதினையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

7) ராம்சரண்
தற்போது, ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது வென்றது பற்றி ராம்சரண் பகிர்ந்திருப்பதாவது, ‘இந்திய சினிமா வரலாற்றிலும் எங்களுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் எப்போதுமே ஸ்பெஷலான ஒன்றாகவே அமையும். ஆஸ்கர் விருது வரை அழைத்து சென்ற அனைவருக்கும் நன்றி. இப்போது வரை நான் கனவில் இருப்பது போலதான் இருக்கிறது. உங்கள் அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
இந்திய சினிமாவின் ஜெம் என ராஜமெளலி சாரையும், கீரவாணி சாரையும் குறிப்பிடுவேன். இதுபோன்ற ஒரு மாஸ்டர்பீஸ் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது பெருமையாக இருக்கிறது. உலக அளவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரு எமோஷனாக மாறி உள்ளது. பாடல் எழுதிய சந்திரபோஸ் சார், பாடகர்கள் ராகுல், கால பைரவா மற்றும் நடன அமைப்பாளர் பிரேம் ரக்ஷித் ஆகியோருக்கும் நன்றி. என்னுடன் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த விருது அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம். இது நம் நாட்டின் வெற்றி!’ என நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார் ராம் சரண்.