சினிமா
வணங்கான்’ படத்திற்காக லுக் டெஸ்ட் முடித்த அருண்விஜய்!

நடிகர் அருண்விஜய் ‘வணங்கான்’ படத்திற்காக லுக் டெஸ்ட் முடித்துள்ளார்.
இயக்குநர் பாலா மற்றும் சூர்யா இருவரும் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு இணைந்த திரைப்படம் ‘வணங்கான்’. இதன் முதல் பார்வை மற்றும் டைட்டில் வெளியாகி படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.

Arunvijay
படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இயக்குநர் பாலாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையில் கருத்து மோதல் நிலவியதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து சில வாரங்களிலேயே இந்தப் படத்தின் நடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் இருந்து விலகுவதாக நடிகர் சூர்யா தெரிவித்தார்.
நடிகர் சூர்யாதான் படத்தில் இருந்து விலகினாரே தவிர ‘வணங்கான்’ படம் கைவிடப்படவில்லை என்பதையும் பாலா தரப்பு உறுதி செய்தது. தற்போது சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்கிறார். இதற்கான லுக் டெஸ்ட் தற்போது முடிவடைந்துள்ளது. விரைவில் அருண்விஜய்யுடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கான, முதல் பார்வை போஸ்டர் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.