இந்தியா
இன்னும் பொறுமை காக்க முடியாது 18 மாதத்தில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும்: விஎச்பி தலைவர் அதிரடி!

அயோத்தி ராமர் கோவில் விவகாரம் நீண்ட காலமாக உள்ள ஒரு சர்ச்சைக்குறிய விவகாரம். இந்நிலையில் இன்னும் 18 மாதங்களில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மத்தியில் பாஜக மீண்டும் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைக்க இருக்கும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் விஎச்பி தலைவர் அலோக் குமார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் இனியும் எங்களால் பொறுமை காக்க முடியாது. ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம். இரு விஷயங்களில் விஸ்வ இந்து பரிஷத் சமரசம் செய்துக் கொள்ளாது. ஒன்று ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவது. இன்னொன்று அயோத்தியின் கலாச்சாரம் தொடர்பான பகுதிக்குள் மசூதிகள் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
ஏற்கெனவே 30 ஆண்டுகளுக்கும மேலாக நாங்கள் பொறுமை காத்துவிட்டோம். இனிமேலும் எங்களால் பொறுமை காக்க முடியாது. அடுத்த 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும் என்றார் விஎச்பி தலைவர் அலோக் குமார்.
















