சினிமா செய்திகள்
‘என் ராசாவின் மனசிலே’ பார்ட்-2 படத்தை இயக்கும் ராஜ்கிரண் மகன்..!

‘என் ராசாவின் மனசிலே’ பார்ட் 2 படத்தின் மூலம் நடிகர் ராஜ்கிரணின் மகன் இயக்குநர் ஆக அறிமுகம் ஆக உள்ளார்.
நடிகர் ராஜ்கிரன் நடிப்பில் 1991-ம் ஆண்டு ‘என் ராசாவின் மனசிலே’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் மூலமாகத் தான் நடிகை மீனா நாயகி ஆக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதே படத்தின் மூலமாகத் தான் நகைச்சுவை நாயகன் ஆக நடிகர் வடிவேலு அறிமுகம் ஆனார்.

இந்தப் படத்தை நடிகர் தனுஷ், இயக்குநர் செலவ்ராகவனின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி இருந்தார். இந்தப் படத்திந் இரண்டாம் பாகத்தை நடிகர் ராஜ்கிரணின் மகன் இயக்க உள்ளார். 20 வயதான் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் ஆக அறிமுகம் ஆக உள்ளார்.

ராஜ்கிரண் தனது மகனின் திரைப் பயணத்துக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.



