சினிமா செய்திகள்
அன்றே சொன்னார் ராஜ்கிரண்.. பணம் நகையுடன் காதலனுடன் சென்ற வளர்ப்பு மகளிடம் விசாரணை!
Published
2 months agoon
By
Shiva
பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை நடிகர் முனிஷ்ராஜா என்பவர் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் தனது மகளை பணம் மற்றும் நகைக்காகவே முனிஷ்ராஜா திருமணம் செய்து கொண்டதாக ராஜ்கிரண் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நடிகர் ராஜ்கிரண் – பத்மஜோதி தம்பதியினர் பிரியா என்பவரை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தனர் என்பதும் அவர் சமீபத்தில் முகநூல் மூலம் நடிகர் முனிஷ்ராஜாவை காதலித்து, நடிகர் ராஜ்கிரண் குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த ராஜ்கிரண் தனது வளர்ப்பு மகளுக்கும் தனக்கும் இனி எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் தன்னிடம் இருந்து எடுத்துச் சென்ற நகை மற்றும் பணத்துக்காகவும், தனது நற்பெயரை கெடுப்பதற்காகவும் தான் நடிகர் முனிஷ்ராஜா தனது மகளை காதலிப்பது போல நடித்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முனிஷ்ராஜா மற்றும் பிரியா ஆகியோர்களை காவல்துறையினர் விசாரித்தனர். தனது வீட்டிலிருந்து 17 சவரன் நகை மற்றும் குடும்பத்தாலி ஆகியவற்றை பிரியா எடுத்துச் சென்று விட்டதாக ராஜ்கிரண் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் முனிஷ்ராஜா மற்றும் அவரது மனைவி ப்ரியாவிடம் காவல்துறையினர் விசாரித்தனர்.
விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரியா, ‘தனது குடும்ப நகையான 40 சவரன் நகைகளை ராஜ்கிரண் குடும்பத்தினர் தனக்கு கொடுக்க மறுப்பதாகவும் தனக்கு திருமண வயதை தாண்டிய போதிலும் திருமணம் செய்து வைக்காமல் தன்னை வீட்டில் ஒரு வேலைக்காரியாக நடத்தியதாகவும் தனக்கு சேர வேண்டிய நகைகளை காவல்துறையினர் தான் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
You may like
திருமணத்திற்கு பெண் கேட்டு நடுரோட்டில் போஸ்டருடன் நின்ற வாலிபர்.. அவ்வளவு விளையாட்டா போச்சா?
28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்ட 70 வயது மாமனார்.. வைரல் புகைப்படம்!
மின்சார கட்டணம் செலுத்தாததால் அடித்தே கொல்லப்பட்ட முதியவர்: அதிர்ச்சி சம்பவம்!
சகோதரரின் திருமணத்திற்காக பிரிட்டனில் இருந்து பறந்து வந்த பெண்.. வைரல் வீடியோ
2022ல் திருமண கொண்டாட்டம்… இந்தியாவில் அதிக திருமணம் நடந்தது இந்த நகரில் தான்!
பைக்கில் 1 கிமீ இழுத்து செல்லப்பட்ட முதியவர்.. ஈவு இரக்கமில்லா இளைஞர் கைது: அதிர்ச்சி வீடியோ