சினிமா செய்திகள்
முரட்டுக்காளை ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார்

நடிகர் ரஜினிகாந்தின் ஆஸ்த்தான ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார். அவருக்கு வயது 92. வயது மூப்புக் காரணமாக அவர் இன்று காலமானார். அவரது மறைவை அறிந்த திரையுலகினர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றன்ர்.
ஜெய்சங்கரின் வல்லவனுக்கு வல்லவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சி இயக்குநராக அறிமுகமானவர் ஜூடோ ரத்தினம். அப்போவே கோலிவுட் மட்டுமின்றி, டோலிவுட், பாலிவுட் என 9 மொழி படங்களில் சண்டை பயிற்சி இயக்குநராக சுமார் 1000 படங்களுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார்.

#image_title
பல படங்களில் நடிகராகவும் நடித்து அசத்தி உள்ளார் ஜூடோ ரத்தினம். ரஜினிகாந்தின் முரட்டுக் காளை படத்தில் இவர் அமைத்த ஸ்டன்ட் காட்சிகள் தான் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்த்துக்கே உயர்த்தியாகவும் பலரும் பாராட்டி உள்ளனர்.
ரஜினிகாந்த் உடன் முரட்டுக்காளை, பாயும் புலி, மிஸ்டர் பாரத், பாண்டியன் என மொத்தம் 46 படங்களுக்கும் மேலாக இவர் பணியாற்றி உள்ளார்.

#image_title
ரஜினிகாந்தை போலவே கமல்ஹாசனுக்கும் சகலகலா வல்லவன் படத்தில் சூப்பரான சண்டைக் காட்சிகளை அமைத்துக் கொடுத்து அசத்தியவர் ஜூடோ ரத்தினம். கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் குன்றி இருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் என பழம்பெரும் நடிகர்களுக்கு மட்டுமின்றி ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து விஜய், அஜித்துக்கு கூட இவர் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றி உள்ளாராம்.