சினிமா செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோபாலா; அச்சச்சோ அவருக்கு என்ன ஆச்சு?

இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. ஆனால், கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆஞ்சியோ சிகிச்சைக்காகத்தான் மனோபாலா சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நலம் நன்றாக உள்ளதாகவும் அவரை சந்தித்த பூச்சி முருகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் மனோபாலாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

#image_title
இந்நிலையில் நடிகர் மனோபாலாவை நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் மனோபாலாவிற்கு என்னாச்சி என பதறியடித்து விசாரித்து வருகின்றனர். ஒரு சிலர் அவர் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தளபதி விஜய்யின் 67வது படத்தில் நடிகர் மனோபாலாவும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது தொடர்பான அறிவிப்பை மனோபாலா வெளியிட்டு அதிரடியாக அந்த பதிவையும் நீக்கி இருந்தார். அதிகாரப்பூர்வ அப்டேட் வருவதற்கு முன்னர் வெளியிட்ட நிலையில், மனோபாலா அந்த ட்வீட்டை டெலிட் செய்திருந்தார். அரண்மனை 4 படத்திலும் மனோபாலா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.