சினிமா
கணம் ஹீரோ கல்யாணத்துக்கு ரெடி; அமெரிக்க டெக்கியை நிச்சயம் பண்ண சர்வானந்த்!

எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை மற்றும் கணம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து அசத்தியவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த். அவருக்கும் அமெரிக்காவில் டெக்னாலஜி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா என்பவருக்கும் இன்று பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தெலுங்கு சினிமாவில் 18 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வருகிறார் நடிகர் சர்வானந்த். 38 வயதாகும் அவர் பார்க்க இன்னமும் சின்ன பையன் மாதிரியே இருப்பார். கடந்த ஆண்டு அமலா அக்கினேனி நடிப்பில் வெளியான கணம் படத்திலும் சர்வானந்த் தான் நாயகன்.

#image_title
இந்நிலையில், இன்று நடிகர் சர்வானந்துக்கும் அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வரும் ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகர் ராம்சரண் உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல் தலைவர் ஒருவரது குடும்பத்துப் பெண் தான் இந்த ரக்ஷிதா ரெட்டி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சர்வானந்துக்கும் ரக்ஷிதா ரெட்டிக்கும் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title
தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகர் சர்வானந்த், இவர் தான் என் வருங்கால மனைவி என ரக்ஷிதாவின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.