செய்திகள்
தங்கமணிக்கு தொடர்புள்ள 14 இடங்களில் மீண்டும் சோதனை – லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

சமீபத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அதில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் தங்கமணி கோடிக்கணக்கில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்திருந்த நிலையில் அது குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

குறிப்பாக தங்கமணி வீட்டிலிருந்து ரூ.2.16 கோடி பணம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி ஹார்ட் டிஸ்க்குகள், மொபைல் போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 10 இடம், ஈரோட்டில் 3 இடம், சேலத்தில் ஒரு இடம் என அவருக்கு சொந்தமான 16 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







