இந்தியா
அவனியாபுரத்தில் பொங்கல் கொண்டாடும் ராகுல் காந்தி – உற்சாகத்தில் காங்கிரஸ்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி, பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் கொண்டாட இருக்கிறார்.
அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண வருகை தருகிறார் ராகுல் காந்தி. தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து ராகுல் காந்தி, பொங்கல் விழாவையும் கொண்டாட உள்ளார். இதனால் தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.

ராகுல் காந்தி, தமிழகம் பற்றியும் தமிழர்கள் பற்றியும் தொடர்ந்து உயர்வாக பேசி வருபவர். ஒரு முறை உணர்ச்சி வயப்பட்ட ராகுல், ‘தமிழர்களுக்கு நான் அதிக நன்றிக்கடன் பட்டுள்ளதாகவே நினைக்கிறேன். ஏன் என்று தெரியவில்லை. ஆனால், தமிழர்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது’ என்று தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸுக்கு மற்ற எந்த மாநிலங்களிலும் சாதகமான முடிவு கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்திலோ, காங்கிரஸ் தான் போட்டியிட்ட 10 தொகுதிகளையும் கைப்பற்றியது. தமிழகத்தைப் பொறுத்தவரை மோடியைவிட, ராகுல்தான் பிரதமராக வேண்டும் என்று பெரும்பாலானோர் அப்போது கருதினார்கள். இந்நிலையில் ராகுல் பொங்கல் விழைவைக் கொண்டாட தமிழகத்துக்கு வருவது முக்கியமானதாக அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.
















