Connect with us

இந்தியா

ராகுல் காந்திக்கு திருமணமா? வரப்போகும் மணமகளுக்கு போட்ட கண்டிஷன்!

Published

on

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் என்றும் அவர் தனக்கு வரப்போகும் மணமகள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி தற்போது 52 வயதில் உள்ளார். கடந்த 1970 ஆம் ஆண்டு பிறந்த இவர் 52 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது சகோதரியான 50 வயதான பிரியங்கா காந்தி, தொழில் அதிபர் ராபர்ட் வதேரா என்பவரை திருமணம் செய்து தற்போது இரண்டு குழந்தைகளுடன் உள்ளார் என்பதும் பிரியங்காவின் குழந்தைகள்தற்போது திருமண வயதை எட்டிவிட்ட நிலையிலும் ராகுல் காந்தி இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் பொதுவாக 25 முதல் 30 வயதுக்குள் திருமணத்தை முடித்து விடுவார்கள் என்ற நிலையில் ராகுல்காந்தி 50 வயதை கடந்த போதிலும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தநிலையில் ராகுல்காந்தி பலமுறை தனது திருமணத்தைப் பற்றி பேசியிருந்தாலும் தற்போது நடந்து வரும் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் தனது திருமணம் குறித்து கூறிய போது தனக்கு வரப்போகும் மணப்பெண்ணுக்கு என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக தன்னுடைய தாய் சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் குணங்களைக் கொண்ட கலவையாக தனக்கு வரப்போகும் மனைவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். தனது பாட்டி இந்திரா காந்தி தனது இரண்டாவது தாய் என்றும் தன்னை மிகவும் அன்புடன் நடத்தியவர் என்றும் அவருடைய அன்பை தரும் வகையில் தனது வருங்கால மனைவி இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியவில்லை என்றாலும் பிரதமரான பின்னர் தான் திருமணம் என்ற கொள்கையில் அவர் இருப்பதாக அவருடைய வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படி என்றால் வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமரானால் அதன்பின் அவருக்கு திருமணம் நடக்குமா? அவர் எதிர்பார்த்த மணமகள் கிடைக்குமா? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?