சினிமா செய்திகள்
எனக்குந்தான் வலிக்குது… தலைவர் ரசிர்கர்கள் மன்னிகணும்’- ராகவா லாரன்ஸ் உருக்கம்

‘எனக்குந்தான் வலிக்குது. ஆனால் தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்கள் என்னை மன்னிக்கணும்’ நடிகர் ராகவா லாரன்ஸ் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்ததில் இருந்து சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் எனக் கூறிக் கொள்ளும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஏன் கலந்து கொள்ளவில்லை எனப் பல ரசிகர்களும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் லாரன்ஸ் உருக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள அதிக பேர் என்னை அழைக்கிறீர்கள். இயக்குநர் சாய் ரமணி மூலம் பலரது அழைப்புகளும் என்னை வந்து சேர்கிறது. தலைவரை மனது மாற வேண்டுகோள் விடுக்குமாறி என்னிடம் கேட்டு வருகிறீர்கள். அதனால் தான் இந்த அறிக்கையை தற்போது வெளியிடுகிறேன். தலைவரின் முடிவால் நீங்கள் என்ன வலியைச் சந்தித்து வருகிறீர்களோ அதே வலியைத் தான் நானும் சந்தித்து வருகிறேன். தலைவர் வேறு எதாவது காரணம் சொல்லி இருந்தால் நாம் அவரிடம் வேண்டுகோள் விடுக்கலாம். ஆனால், தலைவரின் முக்கியக் காரணம் அவரது உடல்நிலை. நமது கோரிக்கையை ஏற்று அவர் முடிவை மாற்றி அதன் பின்னர் ஏதாவது ஆனால் அது காலம் முழுக்க நமக்குக் குற்ற உணர்ச்சியைத் தந்துவிடும்.
அரசியலில் நுழையாவிட்டாலும் அவர் என்றுமே என் குரு தான். இப்போது நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்னவென்றால் அவரது உடல் நலத்துக்கும் அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்வது. என்னுடைய பிரார்த்தனைகளில் அவர் எப்போதுமே இருப்பார். குருவே சரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
My apologies to all Superstar Rajinikanth fans ????@rajinikanth pic.twitter.com/PCXABprEcW
— Raghava Lawrence (@offl_Lawrence) January 12, 2021
















