பிற விளையாட்டுகள்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹாக்கி அணி: பஞ்சாப் வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு!

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அணியில் இந்திய அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ள நிலையில் இந்திய அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதனை அடுத்து இந்திய ஹாக்கி அணியை நாடே கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது.
இந்திய ஹாக்கி அணியில் கேப்டன் மந்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் சிங், ஹர்திக் சிங், ஜாம்ஷெட் சிங், தில் பிரித் சிங், குர்ஜந்த் சிங், மந்தீப் சிங் உள்பட 8 வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் அனைவருக்கும் ரூபாய் ஒரு கோடி பரிசு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் அந்த வீரர்களின் மாநிலங்கள் பரிசுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.