பிற விளையாட்டுகள்
உலகக்கோப்பை ஹாக்கி: பெல்ஜியம் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது ஜெர்மனி அணி..!

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன் ஆனது.
15 ஆவது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் கலந்து சில நாட்களாக நடந்து பெற்று வந்தது என்பது இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேல ஆகிய நகரங்கள் கோலாகலமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு மொத்தம் 16 அணிகள் இந்த உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் கலந்து கொண்ட நிலையில் அனைத்து லீக் ஆட்டங்கள் முடிவடைந்து, அரை இறுதி போட்டியும் முடிந்து பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகிய இரண்டு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
They did it!
The COMEBACK KINGS of #HWC2023 are crowned WORLD CHAMPIONS 💪
Insane scenes after the win #HockeyInvites #HockeyEquals #Germany #WorldCup @DHB_hockey pic.twitter.com/TSD1RGPkKo
— International Hockey Federation (@FIH_Hockey) January 29, 2023
இந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி அணிகள் விறுவிறுப்பாக விளையாடிய நிலையில் முதல் இரண்டு கோல்களை பெல்ஜியம் பதிவு செய்து அசத்தியது. இதனை அடுத்து ஜெர்மனி ஒரு கோலை பதிவு செய்ததை அடுத்து 2-1 என்ற கணக்கில் பெல்ஜியம் முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில் ஜெர்மனி அணியின் வீரர் இன்னொரு கோல் அடிக்க 2-2 என்ற சமநிலையில் முடிவடைந்தது. இதன் பின்னர் ஆட்டநேர இறுதியில் இரு அணிகளும் கோல் போட தீவிர முயற்சி செய்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் ஆட்டநேரம் முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் இருந்ததால் பெனால்டி சூட் முறைக்கு ஆட்டம் சென்றது.
பெனால்டி சூட் என்றாலே முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் தான் கைகொடுக்கும் என்ற நிலையில் இந்த முறை அதிர்ஷ்டம் ஜெர்மனி அணிக்கு கிடைத்தது. அந்த அணி பெல்ஜியம் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
சர்வதேச அணியை அளவில் இரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில் பெல்ஜியம் 15 முறையும் ஜெர்மனி 14 முறையும் வென்று உள்ளது என்பதும் ஏழு போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆன ஜெர்மனி அணிக்கு உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.