தமிழ்நாடு
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எவ்வளவு கட்டணம்? கடைசி தேதி என்ன?
Published
4 weeks agoon
By
Shiva
10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த புதிய கடைசி தேதி ஆகியவற்றை அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
10,11,12ஆம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை கடந்த நவம்பர் மாதம் வெளியானது என்பது தெரிந்ததே. இதன்படி பிளஸ் டூ மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை பொது தேர்வும், பிளஸ்1 மாணவர்களுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை பொதுத்தேர்வு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2022 -23 கல்வி ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு உள்ள பாடத்திற்கு 225 ரூபாய் கட்டணமும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 11ஆம் வகுப்பு அறிவியல் எழுதும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் என்றும் இதரக் கட்டணம் 35 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை ஜனவரி 20-ஆம் தேதி 5 மணிக்குள் மாணவர்கள் கட்டிவிட வேண்டும் என்றும் https://www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்த கட்டணத்தை கட்டலாம் என்றும் அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
You may like
-
ஜே.ஈ.ஈ அட்வான்ஸ் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.. டவுன்லோடு செய்வது எப்படி?
-
வகுப்பறையில் திடீரென உயிரிழந்த 8ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி காரணம்!
-
மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பல்கலைகழகம்!
-
நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளரா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!
-
இனிமேல் இந்த மதிப்பெண்கள் கிடையாது.. ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சி!
-
75% மதிப்பெண்களை பெறாத மாணவர்கள் ஜே.ஈ.ஈ தேர்வை எழுத முடியுமா? தேசிய தேர்வு முகமை விளக்கம்